ஊட்டியில் இறந்து கிடந்த ஆண் புலி | வனத்துறையினரின் அலட்சியம்

 

ஊட்டியில் இறந்து கிடந்த ஆண் புலி | வனத்துறையினரின் அலட்சியம்

நீலகிரி மாவட்டம்  ஊட்டியில் பார்சன்ஸ் வேலி மேல்கோடு மந்தில், சுமார் இரண்டரை வயதுடைய ஆண் புலி ஒன்று இறந்து கிடப்பதாக, வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறை ஊழியர்கள், கால்நடை மருத்துவர் குழுவுடன் இணைந்து சோதனை செய்தனர். கால்நடை மருத்துவரால், புலியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அங்கேயே எரியூட்டப்பட்டது. 

ooty

அப்பகுதியில், சில இடங்களில் விவசாய நிலம் உள்ள நிலையில், வன விலங்குகளால், விவசாய நிலம் பாதிக்கப்படுவதை தடுக்க வைக்கப்பட்ட விஷத்தை சாப்பிட்டு, புலி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில், வனத் துறையினர் விசாரித்து வந்த நிலையில், கால்நடை மருத்துவர்கள் குழு நடத்திய சோதனையில் புலியின் வயிற்றில் சிறிய பிளேடு துண்டு இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியளித்தது.

tiger

சுற்றுலா தளங்களான வனப்பகுதிகளில், ஏற்கெனவே சுற்றுலா பயணிகள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால், அரிய வகை வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து நேர்வதாக, வனப்பகுதிகளுக்குள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுச் செல்ல வனபகுதியின் ஊழியர்கள் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில், புலியின் வயிற்றில் பிளேடு துண்டு கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியளித்தது.

tiger

அதிகாரிகளின் சிபாரிசில் வரும் சுற்றுலா பயணிகளை வன ஊழியர்கள் சோதனை செய்வதில்லை என்றும், அவர்கள் வனபகுதிகளில் பீர் பாட்டில்களை குடித்து விட்டு அங்கேயே உடைத்துவிட்டு செல்வதாகவும், அவர்களை அதிகாரிகள் கண்டுக் கொள்வதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.