ஊசிமீன் தாக்குதல்,உயிர்தப்பிய சிறுவன் !.

 

ஊசிமீன் தாக்குதல்,உயிர்தப்பிய சிறுவன் !.

நீடில் ஃபிஷ் எனப்படும் ஊசிமீன்,நம்ம ஊர் சீலாமீன் சாயலில் இன்னும் மெல்லிய,இன்னும் நீளமான வாயுடன் இருக்கிறது. இந்த மீன்கள் உயிராபத்து எனத் தெரிந்தால்,வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் எதிரியின் மீது மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பாயக்கூடியவை

நீடில் ஃபிஷ் எனப்படும் ஊசிமீன்,நம்ம ஊர் சீலாமீன் சாயலில் இன்னும் மெல்லிய,இன்னும் நீளமான வாயுடன் இருக்கிறது. இந்த மீன்கள் உயிராபத்து எனத் தெரிந்தால்,வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் எதிரியின் மீது மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பாயக்கூடியவை.அப்படிப்பாயும் போது ஊசி மீனின் வாய்பகுதி ஒரு ஈட்டியைப் போல எதிரி உடலில் நுழைந்து விடும்.இத்தகைய ஊசி மீனின் தாக்குதல் ஒன்று தூரகிழக்கு நாடுகளில் பரபரப்பான செய்தி ஆகி இருக்கிறது.

Fish

இந்தோனேஷியவின் தென்கிழக்கு ஸ்லோவாசி மாநிலத்தின் பெள்ட்டன் கடற்கரையில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த முகமது இடுல் என்கிற 16 வயது சிறுவந்தான் ஊசி மீனின் தாக்குதலுக்கு உள்ளானவன்.அவனது கழுத்துப் பகுதியில் நுழைந்து பிடரியில் இரு இஞ்ச் அளவுக்கு வெளி வந்து விட்டது அந்த மீனின் கூர்மையான வாய். இரண்டு நாட்களாக மூன்று டாக்டர்கள், இரண்டு மயக்கமருந்து நிபுணர்கள் சேர்ந்து முகமது இடுலின் கழுத்தில் இருந்து மீனின் வாயை அகற்றி இருக்கிறார்கள்.சிறவன் இடுலுக்கு இன்னும் காய்ச்சல் இருப்பதாலும்,நோய் தொற்று ஏற்படலாம் என்பதாலும் அவனை ஐ.சி.யுவில் வைத்து கண்காணித்து வருகிறார்கள்.