உ.பி மாநிலத்தில் ஆக்சிஜன் இல்லாமல் 60 குழந்தைகள் இறந்த வழக்கில் டாக்டர் விடுதலை…

 

உ.பி மாநிலத்தில் ஆக்சிஜன் இல்லாமல் 60 குழந்தைகள் இறந்த வழக்கில் டாக்டர் விடுதலை…

ஆனால், எதிர் பாரத விதமாகக் குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கபில் கானை 60 குழந்தைகளின் இறப்பிற்குக்  காரணம் என்று கூறி கைது செய்து, 9 மாதங்கள் சிறையிலும் அடைத்தது காவல் துறை. எந்த குற்றமும் செய்யாத கபில் கானின் மருத்துவர் வேலையும் பறிக்கப் பட்டது

கடந்த ஆண்டு, உத்திர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவ மனையில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் 63 குழந்தைகள் உயிர் பறிபோனது. இதனைக் கண்டு மனம் பொறுக்காத டாக்டர். கபில் கான் தனது நண்பரின் உதவியுடன் சொந்த செலவில் ஆக்சிஜன் வாங்கி வந்து பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். 

60 children died

ஆனால், எதிர் பாரத விதமாகக் குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கபில் கானை 60 குழந்தைகளின் இறப்பிற்குக்  காரணம் என்று கூறி கைது செய்து, 9 மாதங்கள் சிறையிலும் அடைத்தது காவல் துறை. எந்த குற்றமும் செய்யாத கபில் கானின் மருத்துவர் வேலையும் பறிக்கப் பட்டது. அதன் பிறகு, அவர் கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாநில அரசு விசாரணைக் குழு அமைத்தது. அந்த விசாரணையில், டாக்டர் கபில் கான் குற்றமற்றவர் என்றும் குழந்தைகள் இறப்பில் இவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை அளித்தது. 

Doctor kafeel khan

ஒரு வழியாகத் தான் குற்றவாளி இல்லை என்று நிரூபனமானதால் டாக்டர் கபில் கான் மகிழ்ச்சி அடைந்தார். இது குறித்துப் பேசிய அவர், செய்யாத தவறுக்கு குற்றவாளி என்று சிறையில் அடைக்கப் பட்டதாகவும், அவரின் குடும்பங்கள் துன்புறுத்தப் பட்டதாகவும் அவரின் வேலை பறிபோனதாகவும் கூறியுள்ளார். மேலும், ஒரு மருத்துவராக என்னால் என்ன செய்ய இயலுமோ அதைத் தான் செய்தேன் என்றும் கூறியுள்ளார்.