உ.பியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்க சொல்லி மகள் கண் முன்னே இஸ்லாமியர் தாக்குதல்

 

உ.பியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்க சொல்லி மகள் கண் முன்னே இஸ்லாமியர் தாக்குதல்

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 45 வயதுமிக்க இஸ்லாமியரை அவரது மகளின் கண்முன் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் எழுப்பிக்கொண்டே சாலையில் நடந்து செல்லும்படி ஒரு குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்க சொல்லி மகள் கண் முன்னே இஸ்லாமியர் தாக்குதல்

குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம், பசுக்காவலர்கள் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது தொடர் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு ஓரிரு நாட்கள் ஆதங்கம்,இரங்கல், கண்டனங்கள் எழும். அதன்பின் அந்த சம்பவங்கள் மறைகின்றன. இதுபோன்று மதரீதியாக நடைபெறும் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் இந்திய குடிமகன் தனது சொந்த தேசத்திலேயே உயிர் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது.

இந்நிலையில் பஜ்ரங் தளம் கூட்டம் நடத்தி வந்த இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் ஒரு குழுவினர், இஸ்லாமியரை கடுமையாக தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், போலீசாரின் கண் முன்னே இஸ்லாமியரை ஒரு கும்பல் அடிக்கிறது. ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுமாறு கடுமையாக அந்த கும்பல் தாக்குகிறது. இதனை கண்ட அந்த இஸ்லாமியரின் மகள் அப்பா.. அப்பா… என கதறும் காட்சிகள் காண்போரை கலங்க வைக்கின்றன. பாதிக்கப்பட்டவர் புகாரின் அடிப்படையில் உள்ளூர் நபர் ஒருவர், அவரது மகன் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் மீது கான்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நபர் இ-ரிக்ஷா ஓட்டிக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாகவும், ஜெய் ஸ்ரீராம் சொல்லவில்லை எனில் அந்த இஸ்லாமிய தொழிலாளரையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.