உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு பறக்கும் ஜானு!

 

உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு பறக்கும் ஜானு!

நடிகை திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான 96 திரைப்படத்தில் ஜானு கதாபாத்திரம் பெரிதாகப் பேசப்பட்டது.  அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாகியுள்ள கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, மற்றும் பரமபத விளையாட்டு ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

நடிகை திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான 96 திரைப்படத்தில் ஜானு கதாபாத்திரம் பெரிதாகப் பேசப்பட்டது.  அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாகியுள்ள கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, மற்றும் பரமபத விளையாட்டு ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. அதையடுத்து எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

trisha

ராங்கி என்று பெயரிட்டுள்ள  இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸின் கதை, வசனத்தில் உருவாகிவரும்  இப்படத்தில் திரிஷா தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் அமைவது போலத் திட்டமிட்டுள்ளதால், லொகேஷனை முடிவு செய்ய படக்குழு உஸ்பெகிஸ்தான்  செல்லவுள்ளனர்.  அங்கு சில முக்கிய ஆக்சன் காட்சி மற்றும் ஒரு பாடல்  படமாக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.