உஷார் மக்களே..! டோல்கேட் கட்டணம் உயர்கிறது..!

 

உஷார் மக்களே..! டோல்கேட் கட்டணம் உயர்கிறது..!

வரும் நிதியாண்டு  முதல்‌ தமிழகத்தில் சுங்கவரிக் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் நிதியாண்டு  முதல்‌ தமிழகத்தில் சுங்கவரிக் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

எரிச்சலூட்டும் சுங்கக்கட்டணம் 

நாடு முழுவதும் சுங்கக்கட்டணம் என்பது பயணிகளுக்கு  மிகவும் எரிச்சலூட்டும் ஒன்றாக  இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் எழும்புவதும் வாடிக்கையாகவே உள்ளது.

tollgate

நாட்டில் மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் சில கட்சிகள் தேர்தல் அறிக்கையில் கூட சுங்கக்கட்டணங்களை முறைப்படுத்துதல் அல்லது ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகளைப் பிரதானமாக முன் வைப்பதைப் பார்க்க முடிகிறது.

கட்டணம் உயர்கிறது 

எப்போது தான் சுங்கக்கட்டணங்கள் ரத்தாகுமோ என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், தமிழகத்தில் மொத்தமுள்ள 43 சுங்கச்சாவடிகளில், 20 – இல் மட்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கவரிக்கட்டணம் மாற்றியமைக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் இந்த கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

tollgate

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர், ஸ்ரீபெரும்புதூர், சூரப்பட்டு, ஆத்தூர், பூதக்குடி, சின்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதில் சென்னையிலிருந்து பெங்களூரு, சேலம் மற்றும் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 6 சுங்கச்சாவடிகளும் அடங்கும். இந்த 20 சுங்கச்சாவடிகளிலும் ரூ 5 முதல் ரூ 20 வரை கட்டணங்கள் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க 

ஒரு முறை சார்ஜ் செய்தால் 60கிமீ தூரம் ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் ; விலை எவ்வளவு தெரியுமா?

வெய்யில் காலத்தில் காரில் பயணிக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம் !