உழவர்களுக்கான ‘உழவன்’ – கஜா புயலில் சாய்ந்த மரங்களை விற்கச் சிறப்பு ‘செயலி’ அறிமுகம்!

 

உழவர்களுக்கான ‘உழவன்’ – கஜா புயலில் சாய்ந்த மரங்களை விற்கச் சிறப்பு ‘செயலி’ அறிமுகம்!

கஜா புயலில் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்பதற்காக உழவன் என்னும் செல்போன் செயலியை அதிமுக அறிமுகம் செய்துள்ளது.

சென்னை: கஜா புயலில் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்பதற்காக உழவன் என்னும் செல்போன் செயலியை அதிமுக அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் ஒரு வழியாக்கிவிட்டு சென்றுள்ளது. ஆசை, ஆசையாய் வளர்த்த மரங்கள், வேருடன் சாய்ந்து கிடப்பதைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

டெல்டா வாசிகளின் துயரை துடைக்க பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, மரங்களை முறையாக விற்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அந்த மரங்களை நல்ல விலைக்கு விற்றுப் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்காக உழவன் எனும் செல்போன் செயலியை அதிமுக அறிமுகம் செய்துள்ளது. அதற்கான, அறிவிப்பை அதிமுக தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்புர்வமாக அறிவித்துள்ளது.