உள்ளாட்சி மறைமுக தேர்தலில் திமுகவை விட அதிமுக அதிக இடங்களில் வெற்றி !

 

உள்ளாட்சி மறைமுக தேர்தலில் திமுகவை விட அதிமுக அதிக இடங்களில் வெற்றி !

27 மாவட்டங்களில், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் சட்ட ஒழுங்கு காரணமாகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் 4 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடந்து முடிந்தது. மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. அதன் பிறகு, அந்த மசோதா சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு  நிறைவேற்றப்பட்டது. அதன் படி, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 27 மாவட்டங்களில், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் சட்ட ஒழுங்கு காரணமாகத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

 

TTN

அனைத்து பதவிகளிலும் திமுகவை விட அதிமுகவே அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 14 மாவட்ட ஊராட்சிகளில் வென்றுள்ளது. திமுக அதை விடக் குறைவாக 12 மாவட்ட ஊராட்சிகளில் வென்றுள்ளது. அதே போல,  மொத்தமாக உள்ள 314 ஊராட்சி ஒன்றியத்தில் 285 ஊராட்சி ஒன்றியத்தில் மட்டுமே தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் அதிமுக 150 இடங்களிலும் திமுக 135 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தலைவர் பதவிகளுக்கான தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து, துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று மாலை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.