உள்ளாட்சி மறைமுக தேர்தலில் அதிமுக, திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு.. தடுக்க சென்ற டி.எஸ்.பிக்கு அரிவாள் வெட்டு !

 

உள்ளாட்சி மறைமுக தேர்தலில் அதிமுக, திமுகவினர்  இடையே தள்ளுமுள்ளு.. தடுக்க சென்ற டி.எஸ்.பிக்கு அரிவாள் வெட்டு !

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் ஒருவரும் அதிமுக சார்பில் ஒருவரும் போட்டியிட்டுள்ளனர்.

27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கும், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கும்,  9624 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கும் இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலுடன் சேர்ந்து கட்சிகளுக்கிடையே மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. 

ttn

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் ஒருவரும் அதிமுக சார்பில் ஒருவரும் போட்டியிட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது இரண்டு கட்சி உறுப்பினர்களும் தலா 5 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்துள்ளனர். இதனால், வெற்றி பெற்ற வேட்பாளரை அறிவிக்கக் கால தாமதம் ஆகியுள்ளது. இதனிடையே அதிமுக உறுப்பினர்களுக்கும் திமுக உறுப்பினர்களும் சண்டை வந்து அடித்துக் கொண்டுள்ளனர். அதனால், அவர்களைத் தடுப்பதற்காக  டி.எஸ்.பி வெங்கடேசன் சென்றுள்ளார். 

ttn

சண்டையைத் தடுக்க முயன்ற அவரை சண்டையில் ஈடுபட்டிருந்த வேட்பாளர்கள் அரிவாளால் வ வெட்டியுள்ளனர். அதில், அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் 2 பேரைக் கைது செய்துள்ளனர்.