உள்ளாட்சி தேர்தல்… 1 லட்சம் பதவிகள்!  10 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்!

 

உள்ளாட்சி தேர்தல்… 1 லட்சம் பதவிகள்!  10 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்!

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்கள் உள்ளடங்கிய மண்டல அளவிலான தேர்தலை நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைப்பெற்றது. இதில் பங்கேற்று கலந்து  கொண்ட அலுவலர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார் தமிழக தேர்தல் அதிகாரி பழனிசாமி.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்கள் உள்ளடங்கிய மண்டல அளவிலான தேர்தலை நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைப்பெற்றது. இதில் பங்கேற்று கலந்து  கொண்ட அலுவலர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார் தமிழக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி .

election board

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவியிடங்கள் இருப்பதால், 10 மடங்கு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், சுமார் 10 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பதால், விதிமுறைகளை கண்டிப்பான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.  அதன் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.