உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியில்லை: மக்கள் நீதி மய்யம் 

உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியில்லை: மக்கள் நீதி மய்யம் 

உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்தின் ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை என காலை ரஜினிகாந்த் ஓர் அறிக்கை வெளியிட்டதையடுத்து மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்தின் ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை என காலை ரஜினிகாந்த் ஓர் அறிக்கை வெளியிட்டதையடுத்து மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அண்மையில் நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரமும் வேண்டாம். 2021-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நோக்கம். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும், உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக மக்களின் தேர்வாக இருக்கப் போவதில்லை. உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது.

Kamal Statement

இந்த தேர்தலில் ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபார பங்கீடு மட்டுமே தேர்தலில் அரங்கேறும். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்குபெறுவதால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமானது. மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப்போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.