உள்ளாட்சி தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட பதவிகள் : 30 ஆம் தேதி மறைமுக தேர்தல் !

 

உள்ளாட்சி தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட பதவிகள் : 30 ஆம் தேதி மறைமுக தேர்தல் !

போதிய உறுப்பினர்கள் வராதது மற்றும் அசாதாரண சூழல் நிலவியதன் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்கு கடந்த 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது.அப்போது, பல இடங்களில் சண்டையும் பல இடங்களில் பதற்றமும் நிலவியது. அதனால், கிட்டத்தட்ட 294 பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடங்களுக்கான தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, போதிய உறுப்பினர்கள் வராததும் மற்றும் அசாதாரண சூழல் நிலவியதன் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

ttn

இந்நிலையில், விடுபட்ட ஒன்றிய தலைவர்,மாவட்ட தலைவர் மற்றும்  மாவட்ட துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 30ஆம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைவர் பதவிகளுக்கான தேர்தல் காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மறைமுக தேர்தல் பற்றி நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றிருந்தால் அதனை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.