உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களின் மொத்த பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு !

 

உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களின் மொத்த பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு !

தேர்தல் நடக்கும் மாவட்ட அலுவலகங்களில் மட்டுமே நேற்று இரவு வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப் பட்டதே தவிர மாநில தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

வரும் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான மனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை நடைபெற்றது. தேர்தல் பணிகளைக் கண்காணிக்கத் தேர்தல் நடக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வீதம் 27 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ttn

உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு குறித்து  நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  அதில், மொத்தமாக இருக்கும் 152 நகராட்சி தலைவர் பதவிகளில் 51 பதவி பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 91 ஆயிரம் பதவிகளுக்கு 2,80,000 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனை மற்றும் திரும்பப் பெறுதல் போன்ற அனைத்தும் நேற்று முடிவடைந்து வேட்பாளர்களின்  ஒவ்வொரு மாவட்டங்களிலும் இறுதி பட்டியல் நேற்று இரவு வெளியானது. 

ttn

தேர்தல் நடக்கும் மாவட்ட அலுவலகங்களில் மட்டுமே நேற்று இரவு வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப் பட்டதே தவிர மாநில தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. அதனால், வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்களையும் அதிகாரப் பூர்வமாக மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.