உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று வெளியீடு !

 

உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று வெளியீடு !

அதற்கான மனுத் தாக்கல் நேற்று முன் தினத்தோடு முடிவடைந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது

வரும் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான மனுத் தாக்கல் நேற்று முன் தினத்தோடு முடிவடைந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது. தேர்தல் பணிகளைக் கண்காணிக்கத் தேர்தல் நடக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வீதம் 27 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ttn

உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு குறித்து  நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், பொதுப்பிரிவு பெண்களுக்கு 51 நகராட்சி தலைவர் பதவிகளும், தாழ்த்தப்பட்ட இன பெண்களுக்கு 9 நகராட்சி தலைவர் பதவிகளும் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கான (பொது) 8 நகராட்சிகளின் தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இருக்கும் 152 நகராட்சி தலைவர் பதவிகளில் 51 பதவி பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ttn

இந்நிலையில், வேட்பு மனு பரிசீலனை முடிவடைந்து வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியாகவுள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று மாலை 3 மணி வரை அவகாசம் உள்ளது. அதன் பின்னரே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் ஒட்டப்படும்.