உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி மாரடைப்பால் மரணம் !

 

உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி மாரடைப்பால் மரணம் !

தலைமைக் காவலர் அதிகாரி ஜான்சன் உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி முடிந்த நிலையில்,  இன்று  27 மாவட்டங்களில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரத்தின் படி 10.41% வாக்குப்பதிவு ஆகியுள்ளது என்று தகவல்கள் வெளியானது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததால், இந்த தேர்தலில் பதற்றமான சூழல் நிலவும் என சுமார் 60,000 போலீசார் நாடு முழுவதும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ttn

இந்நிலையில், கரூர் மாவட்டம் ராச்சாண்டார் திருமலை அருகே உள்ள ஊராட்சியிலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில், தலைமைக் காவலர் அதிகாரி ஜான்சன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு வந்து மயங்கி விழுந்து, அங்கேயே உயிரிழந்துள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.