உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடத்தப்படும் : பால்வளத் துறை அமைச்சர் தகவல்..!

 

உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடத்தப்படும் : பால்வளத் துறை அமைச்சர் தகவல்..!

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. அதனால், திமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வருட இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன் படி, தேர்தல் நடத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்னும் அதிகாரப் பூர்வமான எந்த அறிவிப்பும் இது வரை வெளியாகவில்லை. 

MInister

இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வரும் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள் பதவி ஏற்பார்கள் என்று பிராமணபத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.