உள்ளாட்சித் தேர்தல் : இன்னும் 3 நாட்களில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்..!

 

உள்ளாட்சித் தேர்தல் : இன்னும் 3 நாட்களில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்..!

தேர்தல் நடைபெறும் தேதி குறித்து இது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியது.

election

அதனையடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் பெயர் மாற்றம் உள்ளிட்ட அனைத்தையும் வரும் 18 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால் , தேர்தல் நடைபெறும் தேதி குறித்து இது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

ADMK

இந்நிலையில், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6 ஆம் தேதி அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

admk

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் போவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.