உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக புதிய மனு !

 

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக புதிய மனு !

3 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலின் அறிவிப்பு கடந்த 2 ஆம் தேதி வெளியானது.

3 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலின் அறிவிப்பு கடந்த 2 ஆம் தேதி வெளியானது. அதில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்றும் நகர்ப்புற தேர்தலின் அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இது குறித்து திமுக சார்பில், தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சட்ட விதிகளையும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் நிறைவேற்ற உத்தரவிடக் கோரி  உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. 

ttn

இதனைத் தொடர்ந்து, இன்று வார்டு மறுவரையறை உள்ளிட்ட சட்ட விதிகளை நிறைவேற்றுவதற்கு முன்னர் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்ததால், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் புதிய மனு ஒன்று உச்சநீதி மன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுவும் நாளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் நாளை விசாரிக்கப்பட உள்ளது.