உள்ளாட்சித் தேர்தல் : அதிமுகவிடம் 20% இடங்கள் கேட்க தேமுதிக முடிவு..!

 

உள்ளாட்சித் தேர்தல் : அதிமுகவிடம் 20% இடங்கள் கேட்க தேமுதிக முடிவு..!

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியதால், டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நாடாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADMK

மக்களவை தேர்தலில் தேமுதிக அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்தது. அதனைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக கட்சித் தலைவர்கள் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா, இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அதிமுகவுக்காக வாக்கு சேகரித்தது. அதன் பின்,  இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது, தேமுதிகவினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

dmdk

இந்நிலையில், தேமுதிக கட்சி உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிடம் 20% இடங்கள் மற்றும் 2 மாநகராட்சியைக் கேட்க முடிவு செய்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

DMDK

அதில், சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால், வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக தொண்டர்கள் விரும்புகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக 20% இடங்களையும் 2 மாநகராட்சிகளையும் தேர்தல் அறிவிப்பின் பின்னர் கேட்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் அழைத்து அதிமுக இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.