உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்த முயற்சி! – டாக்டர் ராமதாஸ் சந்தேகம்

உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்த முயற்சி நடப்பதாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நவம்பர் 18ம் தேதி இரவு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

ramadoss

election

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்று அ.தி.மு.க அறிவித்தது. இதனால் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், உள்ளாட்சித் தேர்தல் இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை… அரசு தாமதப்படுத்த முயற்சித்து வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கமான குற்றச்சாட்டவே அதை அனைவரும் பார்த்தனர். ஆனால், இப்போது, அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான பா.ம.க-வே இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.