உள்ளாட்சித் தேர்தலுக்கான வீடியோ கான்பிரன்ஸ் ஆலோசனையில் மாநில தேர்தல் ஆணையம்..!

 

உள்ளாட்சித் தேர்தலுக்கான வீடியோ கான்பிரன்ஸ் ஆலோசனையில் மாநில தேர்தல் ஆணையம்..!

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. நேற்று முன் தினம் நாங்குநேரி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இன்னும் 15 நாட்களில் இடைத்தேர்தல் நடக்கும் என்று தெரிவித்தார். மேலும், மாநில தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

Election

இந்நிலையில், இன்று மாலை 3 மணியளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கான்பிரன்ஸில் உள்ளாட்சித் தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்தும், தேர்தலுக்கான வாக்குப்பட்டியல், வாக்கு இயந்திரங்கள், வாக்குச் சாவடிகள் அமைப்பு, தேர்தல் அதிகாரிகள் நியமிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.