உள்ளாட்சித் தேர்தலில் ஸ்டாலினுக்கு உதவிய அதிகாரி! – போட்டுடைத்த துரைமுருகன் 

உள்ளாட்சித் தேர்தலில் ஸ்டாலினுக்கு உதவிய அதிகாரி! – போட்டுடைத்த துரைமுருகன் 

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகம் முழுக்க ஆளுங்கட்சியினர் முறைகேடு செய்து வெற்றி பெற்றுவருவதாகச் செய்தி வந்தபோது மு.க.ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி போராடியதால்தான் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற முடிந்தது என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

trichy

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க உறுப்பினர்களுக்கான மாநாடு திருச்சியில் நடந்தது. இந்த மாநாட்டில் துரைமுருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டில் அவர் பேசியதாவது:
“உள்ளாட்சித் தேர்தல் முடிவின்போது அதிக இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றுவிடும் என்று கருதிய அ.தி.மு.க அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினர். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வாக்கு எண்ணும் இடங்களுக்குள் நுழைந்து அ.தி.மு.க வெற்றிபெற்றதாக அறிவிக்கும்படி மிரட்டல் விடுத்தனர். இதனால், தி.மு.க வெற்றியை அறிவிக்கவே அதிகாரிகள் மறுத்தனர். அறிவித்தாலும் வெற்றிச் சான்றிதழை அளிக்க மறுத்தனர்.இது தொடர்பாக அறிவாலயத்திலிருந்த ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதும் இருந்து செய்தி வந்துகொண்டே இருந்தன. இதனால், கோபத்திலிருந்தார் ஸ்டாலின்.

stalin

தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று நிர்வாகிகள் கூறினோம். யாரை அனுப்பிவைக்கலாம் என்று பேச்சு எழுந்தது. நானே ஆணையத்துக்கு வருகிறேன் என்று கிளம்பினார் ஸ்டாலின்.
அந்த இரவு நேரத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து அவர் கேட்ட விதம், பேசிய திட்டத்தைப் பார்த்து அதிகாரிகளே அஞ்சினார்கள். ஒரு கட்டத்தில் ஒரு அதிகாரியைப் பார்த்து ‘இனி நான் வந்து பார்க்கமாட்டேன். என்னை நீங்கள் வந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிக் காட்டுவேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார். 
அந்த அதிகாரி எனக்கு நன்கு தெரிந்தவர்தான். அவர் என்னுடைய கையை பிடித்துக்கொண்டு “தலைவரிடம் சொல்லுங்கள்… என்னால் முடிந்ததை செய்கிறேன்” என்று கூறினார். அன்று இரவு ஸ்டாலின் தூங்கியிருந்தால் இன்று இங்க இத்தனைப்பேர் வந்திருக்க முடியாது. அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க-வே வெற்றி பெற்றிருக்கும். உங்கள் ஒவ்வொருவரின் வெற்றியிலும் ஸ்டாலினின் உழைப்ப உள்ளது” என்றார்.