உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத் திறனாளிகளும் போட்டியிடலாம் : தமிழக அரசு அறிவிப்பு

 

உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத் திறனாளிகளும் போட்டியிடலாம் : தமிழக அரசு அறிவிப்பு

டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் படி மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு இன்று பரிந்துரை செய்தது.

3 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப் படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதி நடத்தும் படி மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு இன்று பரிந்துரை செய்தது. உள்ளாட்சித் தேர்தலின் தேதி குறித்து தமிழக அரசிடம் இருந்து இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை. 

Election

சென்னை மாநகராட்சி முனிசிபில் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டத்தில் காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள், தொழு நோயாளிகள் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடக் கூடாது, அவர்களின் மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைச் சட்டத்தை மாற்றி எழுதத் தமிழக அரசு முடிவு செய்தது. 

Tamilnadu

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் தொழு நோயாளிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்று சட்டத்தை மாற்றி சட்ட திருத்தும் செய்தது. அதனையடுத்து, வரும் உள்ளாட்சித் தேர்தலில் காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழு நோயாளிகள் உள்ளாட்சித் தேர்தலின் நகர்ப்புறங்களில் போட்டியிடலாம் என்ற சட்டத்தைப் பின்பற்றும் படி அரசாணை வெளியிட்டுள்ளது.