உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இந்த தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் : திமுக

 

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இந்த தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் : திமுக

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப் படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

Election

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 15 மற்றும் 16 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக கட்சி நேற்று அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, வரும் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுக தயாராகி விட்டதாகவும் ஸ்டாலினும் தெரிவித்துள்ளார்.