உள்நாட்டு விமானங்களில் விரைவில் வைஃபை இன்டர்நெட் வசதி

 

உள்நாட்டு விமானங்களில் விரைவில் வைஃபை இன்டர்நெட் வசதி

இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் கூடிய விரைவில் வைஃபை இன்டர்நெட் வசதி வழங்கப்பட உள்ளது.

டெல்லி: இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் கூடிய விரைவில் வைஃபை இன்டர்நெட் வசதி வழங்கப்பட உள்ளது.

விமானத்தில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற கேஜெட்டுகள் ப்ளைட் மோடில் இருக்கும்போது வைஃபை இன்டர்நெட் வசதி மூலம் இணையத்தை அணுக பயணிகளுக்கு உள்நாட்டு விமான சேவைகளில் அனுமதி வழங்கப்பட உள்ளது. அதாவது இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் கூடிய விரைவில் வைஃபை இன்டர்நெட் வசதி வழங்கப்பட உள்ளது. விமான விதிகள் 1937-இன் திருத்தத்தின்படி, உள்நாட்டு விமானத்தில் உள்ள பைலட்-இன்-கமாண்ட் இப்போது ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களில் பயணத்தின்போது இணைய சேவைகளை அணுக அனுமதிக்க முடியும்.

ttn

விமானம் (இரண்டாம் திருத்தம்) விதிகளின்படி விமானத்தில் இணைய சேவையைப் பயன்படுத்த வைஃபை மூலம் வழிவகை செய்வதற்கான அனுமதியை சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் (டிஜிசிஏ) சான்றளித்துள்ளது. விமானம் வானில் பறக்க புறப்படும்போது அதன் வெளிப்புற கதவுகள் அனைத்தும் மூடப்படும். அப்போது முதல் வைஃபை மூலம் பயணிகள் இன்டர்நெட் பயன்படுத்த முடியும்.