உள்நாட்டுல கருத்து வேறுபாடு இருக்கும் ஆனா வெளிநாட்டுல நாங்க எல்லாம் ஒன்னு- சசி தரூர்

 

உள்நாட்டுல கருத்து வேறுபாடு இருக்கும் ஆனா வெளிநாட்டுல நாங்க எல்லாம் ஒன்னு- சசி தரூர்

இந்தியாவில் எங்கள் இடையே (அரசியல் கட்சிகள்) சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கும், ஆனால் வெளிநாட்டு கொள்கையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக நிற்போம் என சசி தரூர் கூறினார்.

புனேவில் நடந்த இலக்கிய திருவிழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது: காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்ய பாகிஸ்தான் தகுதி குறைந்த நாடு. குறிப்பாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் அதன் சொந்த செயல்களை பார்த்தாலே தெரியும். நான் ஒரு மறைமுக செய்தியே வெளியே அனுப்ப விரும்புகிறேன். 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்

எங்கள் நாட்டில் எங்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் நலன் என்று வரும்போது, இது பா.ஜ. வெளியுறவு கொள்கை அல்லது இது காங்கிரஸ் வெளியுறவு கொள்கை என்று பார்க்க மாட்டோம். அது இந்தியாவின் வெளியுறவு கொள்கை. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காக மத்திய அரசை தொடர்ந்து விமர்சிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டம்

ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது ஆனால் எந்தவொரு நாடுகளும் அதற்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்நிலையில் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது. அதேசமயம் அதற்கு பதிலடி கொடுக்க நம் நாடும் தயாராக உள்ளது.