உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயம்….. மாஸ்க் ஏற்றுமதிக்கு தடை அல்லது கட்டுப்பாடு விதித்த 80 நாடுகள்…. உலக வர்த்தக அமைப்பு தகவல்…

 

உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயம்….. மாஸ்க் ஏற்றுமதிக்கு தடை அல்லது கட்டுப்பாடு விதித்த 80 நாடுகள்….  உலக வர்த்தக அமைப்பு தகவல்…

கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய முதல் சுமார் 80 நாடுகள் மாஸ்க் (முக கவசம்) மற்றும் இதர மருத்துவ கருவிகள் ஏற்றுமதிக்கு தடை அல்லது கட்டுப்பாடு விதித்துள்ளன. உள்நாட்டில் பற்றாக்குறையை தணிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை அந்நாடுகள் மேற்கொண்டுள்ளதாக உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவ தொடங்கிய முதல் ஒவ்வொரு நாடுகளிலும் முக கவசம், கிளவுஸ், வெண்டிலேட்டர் மற்றும் இதர மருத்துவ கருவிகள் போன்றவற்றுக்கான தேவை அதிகரிக்க தொடங்கியது. உதாரணமாக நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியே வரும் போது கட்டாயம் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாஸ்க்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

முக கவசம் வாங்கும் மக்கள்

உள்நாட்டில் தேவை அதிகரித்துள்ளதால்  மாஸ்க், மருந்துகள், வெண்டிலேட்டர் மற்றும் இதர மருத்துவ கருவிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் பல நாடுகள் அவற்றின் ஏற்றுமதிக்கு தடை அல்லது கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. பல நாடுகள் மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை அல்லது கட்டுப்பாடு விதித்து இருப்பது குறித்து உலக வர்த்தக அமைப்பு கூறுகையில், கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய முதல் சுமார் 80 நாடுகள் (72 உறுப்பு நாடுகள் மற்றும் 8 உறுப்பினர் இல்லாத நாடுகள்) மாஸ்க், பாதுகாப்பு உபகரணங்கள், கிளவுஸ், மருந்துகள், வெண்டிலேட்டர் மற்றும் இதர மருத்துவ கருவிகள் ஏற்றுமதிக்கு தடை அல்லது கட்டுப்பாடு விதித்துள்ளன. 

பாதுகாப்பு உபகரணங்கள்
சில நாடுகள் உணவு மற்றும் டாய்லெட் பேப்பர் ஏற்றுமதிக்கு கூட கட்டுபாடு விதித்துள்ளன. உள்நாட்டில் பற்றாக்குறையை தணிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை அந்நாடுகள் மேற்கொண்டுள்ளன. இந்த ஏற்றுமதி தடை மற்றும் கட்டுபாடுகள் தற்காலிகமானது என தெரிவித்தது. உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் ஏற்றுமதி தடை மற்றும் கட்டுப்பாடுகளை பரவலாக தடைசெய்கிறது. இருப்பினும் உணவுபொருட்கள் அல்லது பிற அத்தியாவசிய பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை தடுக்க அல்லது நிவர்த்தி செய்ய தற்காலிகாக ஏற்றமதிக்கு தடை அல்லது கட்டுப்பாடுகளை பயன்படுத்த உறுப்பு நாடுகளை அனுமதிக்கிறது.