உளவுதுறையின் அலட்சியம் ! கோடிகளில் கலக்கும் செம்மர கடத்தல் வியாபாரம்! 

 

உளவுதுறையின் அலட்சியம் ! கோடிகளில் கலக்கும் செம்மர கடத்தல் வியாபாரம்! 

பின்னலாடைகளுக்கு பேர் போன திருப்பூரில் சமீப காலங்களாக செம்மரக் கட்டை கடத்தும் கும்பல் ஊடுருவி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அளவில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணி ஈட்டிதரும் திருப்பூரில், இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

உளவுதுறையின் அலட்சியம் ! கோடிகளில் கலக்கும் செம்மர கடத்தல் வியாபாரம்! 

பின்னலாடைகளுக்கு பேர் போன திருப்பூரில் சமீப காலங்களாக செம்மரக் கட்டை கடத்தும் கும்பல் ஊடுருவி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அளவில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணி ஈட்டிதரும் திருப்பூரில், இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். திருப்பூரில் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் கண்டெய்னர் மூலமாக துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.  இந்நிலையில், திருப்பூரில் கண்டெய்னர் மூலமாக சுமார் 5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தி, பிடிபட்ட விவகாரம் தற்போது திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது. நாட்டையே அதிர வைத்த செம்மரக்கடத்தல் தற்போது திருப்பூரிலும் பரவியிருப்பது குறித்து தொழில் துறையினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இம்மாதம் ஒன்றாம் தேதி திருப்பூரில் இருந்து கண்டெய்னர் மூலமாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து திருப்பூரில் இருந்து அவினாசி செல்லும் பாதையில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்த போது பழங்கள் காய்கறிகள் மத்தியில் செம்மரக் கட்டைகளை கடத்துவது தெரியவந்தது.
இதனிடையே கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த வருவாய் புலணாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கடத்தல் சம்பவத்தில் முமாரக்(47), கார்த்திக்(25), உதுமான் பரூஃ(33), சையது அப்துல் காசிம்(36), அப்துல் ரஹ்மான்(39), மற்றும் தமீம் அன்சாரி(36) ஆகிய 6 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

இதனையடுத்து திருப்பூரை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் உள்ள குடோனில் செம்மரக்க்கட்டைக்கள் பதுக்கி வைத்து கடத்தப்படுவது தெரிய வந்தது. இதனை அடுத்து அதிரடியாக அங்கு சென்ற அதிகாரிகள் அங்கு வைக்கப்படிருந்த சுமார் 9.46 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் நடைபெற்ற விசாரணையில் மேலும் இரண்டு முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததையடுத்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய வருவாய் புலணாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கைக்கள் 4 நாட்கள் கழித்தே உளவு பிரிவு போலீசாரின் கவனத்திற்கு வந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் பிரச்சனை, சுதந்திர தின வருகை என்று தமிழகம் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில், உளவு துறை அதிகாரிகள் இப்படி அலட்சியமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருப்பூர் போன்ற ஏற்றுமதி தொழில் சார்ந்த நகரங்களில் வெளிநாட்டவர்கள் அதிகம் வந்து செல்லும் நிலையில் உளவு பிரிவினரின் இந்த போக்கு தமிழகத்தின் பாதுகாப்பு குறித்து பலத்த கேள்வியை மக்களிடையே எழுப்பியுள்ளது.

இந்த செம்மரக்கடத்தல் விவகாரம் எத்தனை நாட்களாக நடக்கிறது என்பது கேள்விகுறியாகியுள்ளது. பிடிபட்ட கடத்தல் பொருட்கள் உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரியவே 4 நாட்கள் ஆகிறது என்கிற நிலையில், பல்வேறு குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிப்பதில் தொய்வு ஏற்படுவதோடு தொழிலில் ஈடுபடுவோருக்கான பாதுகாப்பும் கேள்விகுறியாகியுள்ளது. எனவே உளவு பிரிவு போலீசார் உறக்கத்தை கலைத்து விட்டு திருப்பூர் போன்ற சர்வதேச ஏற்றுமதி நகரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.