உல்லாச வாழ்க்கைக்காக தொழிலதிபரை கடத்திய பெண்: அதிர வைக்கும் வாக்குமூலம்!

 

உல்லாச வாழ்க்கைக்காக தொழிலதிபரை கடத்திய பெண்: அதிர வைக்கும் வாக்குமூலம்!

சேலம்  தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில், பத்திரம் எழுதும் பெண் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ள நிலையில், மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.

சேலம்  தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில், பத்திரம் எழுதும் பெண் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ள நிலையில், மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாண்டவராயபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். கல்குவாரி, பெட்ரோல் பங்க் போன்றவற்றிற்கு  அதிபராவார். இவர் கடந்த 18ஆம் தேதி தனது மகனை பள்ளியிலிருந்து அழைத்து வர காரில் சென்றுள்ளார். அப்போது அவரை  வழிமறித்த மர்மநபர்கள் சிலர் அவரை  தாக்கியதுடன், கடத்திச் சென்றுள்ளனர். மறுநாள், சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை என்ற பகுதியில், சுரேஷ்குமாரை இறக்கி விட்டு கடத்தல் கும்பல் தப்பிச் சென்றது. 

crime

இதையடுத்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடத்தல் கும்பல் 3 இடங்களில் காரை நிறுத்தி பெட்ரோல் போட்டதாக சுரேஷ்குமார் அளித்த தகவலின் பேரில் அங்கிருந்த  சிசிடிவி ஆய்வு செய்தனர்.  இந்த விசாரணையில் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், அவரது தங்கையும் பத்திர எழுத்தருமான ஜெயந்தி, தாண்டவராயபுரத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத், அஸ்தம்பட்டியை சேர்ந்த தீபக் ராஜ் ஆகிய 4 பேரையும் கடந்த 29-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இதில்  ஹரிபிரசாத் சுரேஷ்குமாரின் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்தது.

arrested

இந்த கடத்தலுக்கு மூளையாகச் செய்யப்பட்ட ஜெயந்தி அளித்துள்ள வாக்குமூலத்தில்,’கணவரை விவகாரத்து செய்தபின் பத்திரம் எழுதும் பணியை செய்து வந்தேன். அதனால் எனக்கு தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் செய்பவர்கள் என பலருடன் நட்பு ஏற்பட்டது.அதில் ஒருவர் தான் சுரேஷ் குமாரின் உறவினர் ஹரிபிரசாத். அவரிடம் விரைவில் பணக்காரியாக மாற வேண்டும் என்ற ஆசையை கூறினேன். அதற்கு அவர் சுரேஷ்குமாரை கடத்தினால் பணம் சம்பாதித்து செட்டில் ஆகலாம் என்று கூறினார். அதனால் ஆட்களை வைத்து அவரை கடத்தினோம். அவரை கட்டி வைத்து அடித்து பணம் கேட்டு மிரட்டினோம். பிறகு அவரிடம் இருந்த ஐந்து சவரன் நகையை பறித்து கொண்டு போலீசில் கூற கூற கூடாது என்று கூறி  மிரட்டி அனுப்பினோம்’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயந்தி, ஹரிபிரசாத், தீபக் ராஜ், செந்தில்குமார் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களைச்  சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கடத்தலில்  தொடர்புடைய மற்ற நால்வரை  போலீசார் தீவிரமாகத் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.