உலக வரலாற்றில் முதன்முறையாக டிஸ்கவரி சேனலில் பிரதமர் மோடி! ஆகஸ்ட் 12 ஆம் தேதி காணத்தவறாதீர்கள்!! 

 

உலக வரலாற்றில் முதன்முறையாக டிஸ்கவரி சேனலில் பிரதமர் மோடி! ஆகஸ்ட் 12 ஆம் தேதி காணத்தவறாதீர்கள்!! 

அரசியல் தவிர பிரதமர் மோடியின் மறுபக்கத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி ஒன்று டிஸ்கவரி சேனலுக்காக படம் பிடிக்கப்பட்டுள்ளது. 

அரசியல் தவிர பிரதமர் மோடியின் மறுபக்கத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி ஒன்று டிஸ்கவரி சேனலுக்காக படம் பிடிக்கப்பட்டுள்ளது. 

பியர் கிரில்ஸ் சாகசத்துக்குப் பெயர்போனவர்…பிரிட்டனைச் சேர்ந்த வன ஆர்வலரான இவர் டிஸ்கவரி உள்ளிட்ட பிரபல டிவிக்களில் வனங்கள் தொடர்பான‌ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். வெயில் புகாத அமேசான் மழைக் காடுகள், தாங்க முடியாத வெப்பம் நிலவும் சஹாரா பாலைவனம், ஆர்டிக் பனிப்பிரதேசம், ஆபத்து நிறைந்த பசிபிக் தீவுகள், எரிமலைப் பள்ளத்தாக்குகள் என எந்த இடத்திலும் நம்மால் தப்பித்து வெளியே வர முடியும் என்பதை MAN VS WILD என்ற நிகழ்ச்சி மூலம் நிரூபித்து வருகிறார் ‌இவர் . 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அமெரிக்க நடிகர்கள் ஜூலியா ராபர்ட்ஸ், நிக் ஜானஸ்,  உள்ளிட்டோருடனும் விளையாட்டு வீரர்களில் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்ட பிரபலங்களுடன் சாகச நிகழ்ச்சிகளை நடத்தியவர் பியர் கிரில்ஸ்‌. டிஸ்கவரி சேனல் என்றாலே இவரின் MAN VS WILD நிகழ்ச்சியை தவறாமல் பார்க்கும் இந்திய ரசிகர்களுக்கும் ஒரு சிறப்பு எபிசோடை  எடுத்துள்ளார். இதில் இந்திய  பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மற்றும் ‌83 ஆண்டுகள் பழமையான தேசியப் பூங்கா ஜிம் கோகோர்பெட் தேசியப் பூங்கா. இதன் பசுமையான சூழலில்தான் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பியர் கிரில்சுடன் காடு, மலைகளில் பயணம் செய்வது, படகில் செல்வது என சாகச பயணத்தில் பிரதமர் பங்களித்துள்ளார். வனப்பகுதியில் மனிதன் எவ்வாறு உயிர் வாழ முடியும் ? வனப்பகுதிக்குள் தனியாக வசிப்பது எப்படி இருக்கும்? உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பிரதமர் மோடியுடன் பியர் கிரில்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார். இயற்கையின் சூழலில் வளர்ந்தவன் என்பதால் மலை மற்ற‌ம் காடுகளில் சுற்றுவது தனக்கு கைவந்த கலை என மோடியும் ‌உற்சாகத்துடன் பியர் கிரில்சுக்கு இணையாக சாகசங்களை நிகழ்த்தியுள்ளார்.

180 நாடுகளில் உள்ள மக்கள் பிரதமர் மோடியின் மறு பக்கத்தை பார்க்கப் போகிறார்கள் என்றும் நரேந்திர மோடி போன்ற சிறந்த தலைவருடன் நிகழ்ச்சி நடத்தியது பெரும் பாக்கியமாக கருதுவதாக பியர் ட்விட் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி ஆக‌ஸ்ட் 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆங்கிலம் தவிர பெங்காலி, இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் மோடி பங்கேற்கும்  MAN VS WILD நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.