உலக வங்கியின் நிர்வாக இயக்குநராக இந்தியப் பெண் நியமனம்!

 

உலக வங்கியின் நிர்வாக இயக்குநராக இந்தியப் பெண் நியமனம்!

பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குநரான அன்ஷுலா காந்த் உலக வங்கியின் மேலாண்மை மற்றும் முதன்மை நிதி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குநரான அன்ஷுலா காந்த் உலக வங்கியின் மேலாண்மை மற்றும் முதன்மை நிதி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 உலக வங்கி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இயங்கி வருகிறது. இது உலக நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடனுதவி அளித்து வருகிறது.  இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குநரான அன்ஷுலா காந்த் உலக வங்கியின் மேலாண்மை மற்றும் முதன்மை நிதி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Anshula Kant

இதுகுறித்து உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் கூறும் போது, அன்ஷுலா காந்த்தை  உலக வங்கியின் மேலாண்மை மற்றும் முதன்மை நிதி அதிகாரியாக நியமனம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். அன்ஷுலா நிதி, வங்கி உள்ளிட்ட துறைகளில் 35 வருடத்திற்கு  மேலாக அனுபவம் மிக்கவர். இவர் பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குநராக பல புதுமைகளைச் செய்துள்ளார்’ என்றார்.

​    ​​    ​A

இனிவரும் காலங்களில்  உலக வங்கி குழுமத்தில் நிர்வாக ரீதியாகவும், நிதி மேலாண்மை தொடர்பாகவும் ஏற்படும் சிக்கல்களுக்கு அன்ஷுலா காந்த் தான் பொறுப்பாவார் என்பது குறிப்பிடத்தக்கது.