உலக வங்கியின் தலைவராகிறார் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப்?

 

உலக வங்கியின் தலைவராகிறார் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப்?

உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் தேர்வாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் தேர்வாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

உலக வங்கியின் தலைவராக இருந்தவர் ஜிம் யோங் கிம். அவரின் பதவிக்காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் திடீரென அறிவித்தார். இதனால், உலக வங்கியின் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் சூழல் உருவாகியுள்ளது. 

இந்தப் புதிய தலைவருக்கான போட்டியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவாங்காவுக்கும், ஐநாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹா லே ஆகிய இருவரும் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், இவாங்கா ட்ரம்ப் வெற்றி பெறவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், உலக வங்கியின் பெரும் பங்குதாரராக அமெரிக்கா இருப்பதால், அமெரிக்கர்களே உலகவங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.