உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேற்றம்!!

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த மேரிகோம். 

ரஷ்யாவில் பெண்களுக்கான 11வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ எடைப் பிரிவில் பிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் பங்கேற்றார். இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தாய்லாந்தை சேர்ந்த ஜூதாமா ஜிட்பங் என்பவரை எதிர்கொண்டு, 5-0 என வீழ்த்தி கம்பீரமாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Merikom

இந்நிலையில் இன்று காலை நடைபெற்று முடிந்த காலிறுதி சுற்றில் கொலம்பியாவின் விக்டோரியா வேலன்சியாவை சந்தித்தார் மேரி கொம். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மேரி கோம், இறுதியில் 5-0 என வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். 

இதுவரை 6 முறை இதே பிரிவில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருக்கிறார் மெரி கொம். இம்முறையும் தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

இதேபோல் 54 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஜமுனா போரா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்ஜீரியா வீராங்கனையை 5-0 என வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

-vicky