உலக பொருளாதாரம் மந்தநிலைக்குள் நுழைந்து விட்டது…… 2009ல் ஏற்பட்டதை காட்டிலும் மோசமாக இருக்கும்….பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை…

 

உலக பொருளாதாரம் மந்தநிலைக்குள் நுழைந்து விட்டது…… 2009ல் ஏற்பட்டதை காட்டிலும் மோசமாக இருக்கும்….பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை…

கொரோனா வைரஸால் உலக பொருளாதாரம் மந்த நிலைக்குள் நுழைந்து விட்டது. அதன் விளைவுகள் 2009ல் நிகழ்ந்ததை காட்டிலும் மோசமாக இருக்கும் என பன்னாட்டு நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா எச்சரிக்கை செய்துள்ளார்.

தொற்று நோயானா கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்று நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றன. மேலும் மக்களை வீட்டுக்குள்ளே இருக்கும்படி வலியுறுத்தி வருகின்றன.

பன்னாட்டு நிதியம்

இதனால் உலக வர்த்தகம் முதல் உள்நாட்டு வர்த்தகம் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. அதேசமயம் இந்த பாதிப்பு மிக மோசமானதாக இருக்கும் என பன்னாட்டு நிதியம் எச்சரித்துள்ளது. பன்னாட்டு நிதியத்தின் தலைவர் கிறிஸ்டினாலினா ஜார்ஜீவா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக பொருளாதாரம் சரிவு காண தொடங்கியுள்ளது.

வளரும் நாடுகளுக்கு நிதிஉதவி

வளரும் நாடுகளுக்கு உதவ பெரிய அளவில் நிதி தேவை. நாம் மந்தநிலைக்குள் நுழைந்து விட்டோம் என்பது தெளிவாக தெரிகிறது. 2009ல் உலக நிதி நெருக்கடியால் ஏற்பட்டால் மந்தநிலையின் விளைவுகளை காட்டிலும் தற்போது அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். இந்த பாதிப்புகளை சமாளிக்க வளரும் நாடுகளுக்கு சுமார் ரூ.188 லட்சம் கோடி தேவை. 80க்கும் மேற்பட்ட குறிப்பாக குறைந்தவருவாய் கொண்ட நாடுகள் ஏற்கனவே பன்னாட்டு நிதியத்திடம் அவசர நிதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.