உலக புற்றுநோய் தினம்; முடியை தானம் செய்த பெண் செய்தியாளருக்கு குவியும் பாராட்டுகள்-வீடியோ

 

உலக புற்றுநோய் தினம்; முடியை தானம் செய்த பெண் செய்தியாளருக்கு குவியும் பாராட்டுகள்-வீடியோ

உலக புற்றுநோய் தினத்தையொட்டி, தனது முடியை தானம் செய்த பெண் செய்தியாளருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

சென்னை: உலக புற்றுநோய் தினத்தையொட்டி, தனது முடியை தானம் செய்த பெண் செய்தியாளருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

உயிர்க்கொல்லி நோய்களில் முதன்மையானது கேன்சர். இதனால் ஏற்படும் பாதிப்புகள், அதன் சிகிச்சை முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முக்கிய நோக்கம், புற்றுநோய் பற்றிய தவறான மூட நம்பிக்கைகளை ஒழிப்பதாக உள்ளது.

கேன்சர் எனப்படும் புற்றுநோயால் சர்வசாதாரணமாக இன்று பலரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நுரையீரல், மார்பக கேன்சர் என பல வகைகள் உள்ளன. கேன்சர், உடலின் ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு பரவுகிறது. இதை கட்டுப்படுத்த முடியாதாதல், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்டுக்கு 7.6 மில்லியன் மக்கள் புற்றுநோயால் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த ஆண்டின் முக்கிய நோக்கமான பற்றிய தவறான மூட நம்பிக்கைகளை ஒழித்து, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், இது உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய் என்ற விதி போன்ற மூட நம்பிக்கையை அழிக்க முடியும் என கருதப்படுகிறது.

இந்நிலையில், உலக புற்றுநோய் தினத்தையொட்டி,ஹீமோதெரபி சிகிச்சை காரணமாக முடியை இழந்து தவிக்கும் புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிப்பதற்காக முடி தான நிகழ்ச்சி சென்னை வடபழனியில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்த செய்தி சேகரிப்புக்காக சென்ற தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் தனஸ்ரீ தன்னுடைய 7 இன்ச் அளவிலான முடியை தானமாக வழங்கினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முடியை தானமாக வழங்கி மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பெண் செய்தியாளர் தனஸ்ரீக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.