உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

 

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

பொங்கல் பண்டிகையொட்டி நடைபெறும்  உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  தொடங்கியது.

மதுரை: பொங்கல் பண்டிகையொட்டி நடைபெறும்  உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  தொடங்கியது.

tt

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கமாகும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் உலக புகழ் பெற்றவை.

ttn

அந்த வகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு,  பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இந்நிலையில், உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  தொடங்கியது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.

ttn

முதலில் மூன்று கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு அவிழ்த்து விடப்படும் அதன் பின் ஒவ்வொரு காளையாக களமிறக்கப்படும் .ஒரு ஒரு மணி நேரம் நடைபெறும் சுற்றில் 75 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க சுற்றுலாதுறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.