உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை ஓவர்டேக் செய்த பிரான்ஸ் தொழிலதிபர்!

 

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை ஓவர்டேக் செய்த பிரான்ஸ் தொழிலதிபர்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்டு ஓவர்டேக் செய்து 2வது இடத்தை பிடித்தார். பில்கேட்ஸ் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான புளும்பெர்க் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சர்வதேச பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. புளும்பெர்கின் மெகா கோடீஸ்வரர்கள் இன்டெக்ஸில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பியோஸ் தொடர்ந்து 12,500 கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறார். அதேசமயம் இந்த பட்டியலில் 2வது இடத்தில்தான் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜெப் பியோஸ்

கடந்த  திங்கட்கிழமை வரை மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் தனது இடத்தை பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்டிம் பறிகொடுத்துள்ளார். பிரான்சின் பிரபல சொகுசு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்.வி.எம்.எச். நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட் கடந்த மாதம்தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். அந்த மாதத்தில்தான் முதல் முறையாக அர்னால்ட் சொத்து மதிப்பு 10,000 கோடி டாலரை தாண்டியது.

பில் கேட்ஸ்

10,760 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பெர்னார்ட் அர்னால்ட் பிடித்துள்ளார். இவரது  சொத்து மதிப்பு பில்கேட்ஸை விட 20 கோடி டாலர் அதிகமாகும். இந்த ஆண்டில் மட்டும் பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு 3,900 கோடி டாலர் உயர்ந்துள்ளது.