உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸின் பெயர் மாற்றப்பட்டதற்கு இது தான் காரணம்!

 

உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸின் பெயர் மாற்றப்பட்டதற்கு இது தான் காரணம்!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள  வூகான் மாகாணத்தில் முதன் முதலாகப் பரவிய இந்த கொடிய  கொரோனா வைரஸ் 1000 மேற்பட்ட நபர்களின் உயிரைப் பறித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள  வூகான் மாகாணத்தில் முதன் முதலாகப் பரவிய இந்த கொடிய  கொரோனா வைரஸ் 1000 மேற்பட்ட நபர்களின் உயிரைப் பறித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு சீனா மட்டுமில்லாமல் ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட 20 நாடுகளுக்குப் பரவி உலக நாடுகளைப் பீதியடையச் செய்தது.

ttn

உயிரைக் கொல்லும் இந்த கொடிய வகை கொரோனா வைரஸின் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று  உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஏன் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? இதன் புது பெயர் என்ன?…

கொரோனா என்ற லத்தீன் வார்த்தைக்கு மலர் மகுடம் என்று அர்த்தம். அதனால் மலர் மகுடம் போன்ற அனைத்திற்குமே கொரோனா என்ற பெயர் சூட்டப்பட்டது. அதே போலத் தான், முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட மலர் மகுடம் போன்ற வைரஸுக்கும் கொரோனா வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. மொத்தமாக இதுவரை 6 வகையான கொரோனா வைரஸுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். அந்த வைரஸ் எல்லாம் அவ்வளவு ஆபத்து மிகுந்தது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், திடீரென சீனாவில் பரவிய 7 ஆவது வகை இந்த கொடிய வைரஸும் மலர் மகுடம் போன்ற வடிவிலேயே இருப்பதால் இதற்கும் கொரோனா வைரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

ttn

இதனால் இந்த சொல்லைப் பயன்படுத்தி வரும் நிறுவனங்கள் கொரோனா என்ற பெயர் வைத்திருப்பதால் தாங்கள் நஷ்டத்தைச் சந்திப்பதாகவும், அதனால் இதன் பெயரை மாற்ற வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளன. குறிப்பாக  ‘கொரோனா பியர்’ என்ற நிறுவனம் பல இன்னல்களைச் சந்தித்ததால் பெயர் மாற்றம் செய்தால் ரூ.100 கோடி தருவதாகத் தெரிவித்துள்ளது. கொரோனா என்ற பெயரால் பல நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால் உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸின் பெயரை மாற்றியுள்ளது. 

ttn

இதன் புதிய பெயர் கொவிட்-19  (Covid-19). இது கொரோனா, வைரஸ், டிசீஸ் என்ற மூன்று சொல்லின் ஆரம்ப எழுத்துக்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த 19 என்ற எண் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய ஆண்டை குறிக்கிறது. புதிதாக மாற்றப்பட்ட இந்த பெயர் விலங்கு, பூக்கள் உள்ளிட்ட எதனையும் அடிப்படையாகக் கொண்டு இருக்கக் கூடாது என்ற நோக்கில் தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.