உலக நாடுகளில் ரம்ஜான்! “இஸ்லாம் ஒரு மதமல்ல… வாழ்க்கை முறை…”

 

உலக நாடுகளில் ரம்ஜான்! “இஸ்லாம் ஒரு மதமல்ல… வாழ்க்கை முறை…”

நம்ம ஊர் மசூதிகளில் மட்டுமின்றி வெளிநாடுகளில் ரமலான் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 

நம்ம ஊர் மசூதிகளில் மட்டுமின்றி வெளிநாடுகளில் ரமலான் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 

அமெரிக்காவில் பொங்கும் அன்பு

ரம்ஜான் பண்டிகை  அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ – ப்ரீமாண்ட் நகரில் லேக் எலிசபெத் மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்படும்.  ரம்ஜான் அன்று காலை நடைபெற்ற சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொளப்வர். அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் ஓற்றுமையாக வாழவும் ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெறவும் சிறப்பு தொழுகை நடத்தப்படும். அதன்பின்னர் ஒருவரை ஓருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

பல வருடங்களாக சந்திக்கவிட்டாலும், பல மாதங்களாக அவர்களிடம் நான் தொடர்பில் இல்லாவிட்டாலும், ரமலான் என்றவுடன் உலகின் பல்வேறு  நாடுகளில் வாழும் அனைத்து நண்பர்களிடம் என்னை நினைவூட்டினாயே, இதற்காவே இறைவா உனக்கு நன்றி சொல்வதாக கூறி அமெரிக்கர்கள் ரம்ஜானை களைகட்டுவர். ரமலானே நீ பண்டிகையாக மட்டும் இல்லாமல் பெரிய உறவு பாலமாக இருக்கிறது என்கின்றனர் அமெரிக்க முஸ்லீம்கள். 

சாபம் பெற்ற சீன இஸ்லாமியர்கள்!

சீனாவில் அரசு ஊழியர்கள், மாணவர்கள் ரம்ஜான் நோண்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஸிங்ஜியாங் மாகாணத்தில் இயங்கும் அனைத்து உணவகங்களையும் திறந்து வைக்க வேண்டும் என்றும் சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
ஸிங்ஜியாங் மாகாணத்தில் தான் அதிகளவில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் தங்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை ரம்ஜான் நோண்பு மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோண்பு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் சீனாவில் இஸ்லாமியர்கள் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர். ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோண்பு மேற்கொள்ள கூடாது, இறை வழிபாடு மேற்கொள்ள கூடாது மேலும் மதம் சார்ந்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என சீன அரசு உத்தரவிட்டுள்ளது. ஸிங்ஜியாங்கில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று மத தீவிரவாதத்தை அரசே தூண்டி இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் கொண்டாட அனுமதி மறுத்திவருகிறது. 

சவுதியில் ரம்ஜான்! சொர்க்கவாசல் திறப்பு!!

சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் ஈதுல் பித்ர் என்ற பெயரில் ரம்ஜான் திருநாள் கொண்டாடப்படும். அரேபிய நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா இஸ்லாமியர்களுக்குமே, அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும் இருப்பதாக எண்ணி  நோன்பை தவறாமல் இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். 

பாகிஸ்தானில் பகை மறக்க செய்யும் ரம்ஜான்!!

பாகிஸ்தானில் பல்வேறு சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு, ரமலான் காலம் முடியும் வரையில் நாட்டின் எந்தச் சிறையிலும் மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டது. எதிர்களையும் நேசிக்கவேண்டும், அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாகிஸ்தானில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி எந்தவித தீவிரவாத தாக்குதலிலோ அல்லது சண்டை சச்சரவுகளிலோ ஈடுபடாமல் பாகிஸ்தான் வாழ் இஸ்லாமியர்கள் அமைதியான முறையில் நோன்பு இருந்து ரம்ஜானை கொண்டாடுகின்றனர்.