உலக திரைப்படங்களில் முதன்முறையாக, 25 வேடங்களில் விக்ரம்!

 

உலக திரைப்படங்களில் முதன்முறையாக, 25 வேடங்களில் விக்ரம்!

ஒரு படத்தில் 25 பிரதான கேரக்டர்கள் வருவது அபூர்வம். அதுவே அபூர்வம் எனும்போது, கதைநாயகன் 25 கேரக்டர்களில் வருகிறார் என்றால், படம் முழுவதும் அவர்தான் வரவேண்டும்.

உலக திரைப்படங்களில் முதன்முறையாக, 25 வேடங்களில் விக்ரம்!

டீமாண்ட்டீ காலனி, இமைக்கா நொடிகள் என மேக்கிங்கில் மிரட்டிய படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து, அடுத்ததாக விக்ரமை வைத்து பெரிய பட்ஜெட்டில் படமியக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் மும்மொழிகளில் படம் தயாராக இருப்பதால், பட்ஜெட் பெருசு, காஸ்டிங் பெருசு. ஏ.ஆர். ரஹ்மான் இசை, பிரியா பவானி சங்கர் ஜோடி என ஓரளவுக்கு விஷயங்கள் கசிந்தாலும், படக்குழு கசியவிடாத ஒரு செய்தியும் உண்டு. விக்ரமுக்கு இந்தப்படத்தில் 25 வேடங்கள் என்கிறது கோடம்பாக்க பட்சி.

அட்மாஸ்ஃபியருக்கு வருகிறவர்கள், வசனம் பேசும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்,  என்றால், படத்தில் ஹீரோவும் அவரே, ஹீரோயினும் அவரே, வில்லனும் அவரே, அடியாளும் அவரே, போலீசும அவரே! அப்படியாக இருக்குமோ? ஒருவேளை கதையை லீக் பண்ணிட்டோமோ? எது எப்படியோ, யானைக்கு எத்தனையோ ஹைலைட்ஸ் இருந்தாலும், யானையை வச்சி பிச்சை எடுக்குற மாதிரி, எவ்வளவோ கஷ்டமான கேரக்டரா இருந்தாலும் அசால்ட்டு பண்ணும் விக்ரமுக்கு, அதற்கேற்ற ரிசல்ட் மட்டும் கிடைக்காததுதான் குறை. நல்லா பண்ணுங்க சீயான்!