உலக திருவிழாவாகும் தைபூசம்! எதனால் இந்த நாளைக் கொண்டாடுகிறோம் தெரியுமா..!

உலக திருவிழாவாகும் தைபூசம்! எதனால் இந்த நாளைக் கொண்டாடுகிறோம் தெரியுமா..!

அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்கிறது. பலநாட்களாக,.. பல யுகங்களாக நடக்கிறது. தேவர்களால் அசுரர்களை எதிர்கொள்ள முடியவில்லை. அவர்கள் சிவபெருமானின் கைலாயத்திற்கு வந்து தங்களது துண்பத்தைச் சொல்லி முறையிட்டனர்.

thai-poosam-01

அவர்களுக்கு இரக்கம் காட்டிய சிவபெருமான் முருகப் பெருமானைப் படைத்தார்.அந்த தெய்வக் குழந்தைக்கு அன்னை பராசக்தி ஒரு வேலைத் தருகிறாள்.அதன் பிறகுதான் முருகன்,வேலனாகவும் சக்திவேலனாகவும் ஆகி அசுரர்களை வதம் செய்து தேவர்களை காக்கிறான்.அப்படி சக்தியாகிய பார்வதி முருகனுக்கு சக்திவேல் தந்த தினம் தைமாததம்,பூச நட்சத்திர நாளான இன்றையதினம். அதுதான் தைபூசத் திருவிழாவாக உலகம் முழுவதுமாகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. 

thai-poosam-09

இந்தியத் திருவிழாக்களில் அல்லது இந்துமத விழாக்களில் ஹோலி சில வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டாலும்,தைபூசம்தான் உலகின் பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படும் திருவிழாவாக இருக்கிறது. தமிழகத்தில் தைபூசம் கொண்டாடப்படும் அதே நேரத்தில்,இலங்கை,மலேசியா,மொரிஷியஸ், சீசெல்ஸ்,  சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, கனடா,ஃபிரஞ்ச் ரியூனியன், இந்தோனேஷியா, தாய்லாந்து, பர்மா,டிரினிடாட் டுபாக்கோ,கனடா,கரீபியன் தீவுகள் முதலான நாடுகளில் பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் பக்திப் பரவசத்துடன் முருகனை வழிபடுகிறார்கள்.