உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்தியது கொரோனா பரவலை அதிகப்படுத்தும்! – பில்கேட்ஸ் எச்சரிக்கை

உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்தியது கொரோனா பரவலை அதிகப்படுத்தும்! – பில்கேட்ஸ் எச்சரிக்கை

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்திருப்பது கொரோனாவின் வேகத்தைத் தடுக்கும் பணியை தாமதப்படுத்தும் என்று பில்கேட்ஸ் எச்சரக்கைவிடுத்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்திருப்பது கொரோனாவின் வேகத்தைத் தடுக்கும் பணியை தாமதப்படுத்தும் என்று பில்கேட்ஸ் எச்சரக்கைவிடுத்துள்ளார்.

bill-gates-78

உலக சுகாதார நிறுவனம்தான் உலகம் முழுவதும் உள்ள அபாயகரமான நிலைகளைக் கண்டறிந்து எச்சரக்கைவிடுத்து வருகிறது. இந்த அமைப்பு சீனாவுக்கு உதவுகிறது என்று குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதற்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

who-89

இது குறித்து உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் தன்னுடைய அதிருப்தியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். அதில், “உலகமே சுகாதார பிரச்னையில் சிக்கி அவதியும் இந்த நேரத்தில் உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்துவது மிகவும் ஆபத்தானது. அவர்கள் கொரோனா வைரஸ் கோவிட் 19 பரவலைக் குறைத்து வரும் வேலை செய்து வருகின்றனர். அந்த வேலை தடைப்பட்டால் உலகின் வேறு எந்த ஒரு நிறுவனமும் உலக சுகாதார நிறுவனத்தின் செயலை செய்ய முடியாது. இந்த உலகிற்கு முன்பு எப்போதைக் காட்டிலும் மிக அதிகமாக உலக சுகாதார நிறுவனம் தேவை” என்று கூறியுள்ளார்.