உலக சுகாதார அமைப்புக்கு ரூ.3000 கோடி நிதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா

 

உலக சுகாதார அமைப்புக்கு ரூ.3000 கோடி நிதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா

உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சார்பாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை குறைக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.

அந்த அமைப்பின் மிகப்பெரிய நிதி ஆதாரமாக அமெரிக்கா இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு நிதியை குறைக்கப் போகிறார் என்பது பற்றி அவர் எந்த விவரமும் அப்போது அவர் குறிப்பிடவில்லை. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு மிகவும் சார்புடையதாக நடந்து கொள்கிறது. அது சரியல்ல என்று அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

world health organization

இதைத் தொடர்ந்து, கொரோனா விஷயத்தை அரசியலாக்கினால் பிணக் குவியல்களை பார்க்க நேரிடும் என அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு பதிலடி கொடுத்தது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த ரூ.3000 கோடி நிதியை அமெரிக்க அரசு நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா விஷயத்தில் அமெரிக்க அதிபருக்கும், உலக சுகாதார அமைப்புக்கும் நடந்த கருத்து மோதலை தொடர்ந்து நிதியை அமெரிக்க அரசு நிறுத்தி வைத்துள்ளது.