உலக கோப்பை இங்கிலாத்துக்குத்தானோ?

 

உலக கோப்பை இங்கிலாத்துக்குத்தானோ?

டெலிபோனை கண்டுபிடித்த கிரஹாம் பெல் முதன்முறையாக அதனை சோதனை செய்ய முயன்றபோது, நரேந்திர மோடியிடம் இருந்து அவருக்கு 10 மிஸ்ட் கால்கள் வந்திருந்தன என்பதுதான் அப்டேட்டடாக இருப்பதன் அறிகுறி.

டெல்போனை கண்டுபிடித்தது வேணும்னா கிரஹாம் பெல்லா இருக்கலாம், ஆனா அதுல ஒட்டு கேட்குறது எப்புடீன்னு கண்டுபிடிச்சது நாமதாங்க என்ற சினிமா டயலாக் பழசாக போய்விட்டது. அதனால், டெலிபோனை கண்டுபிடித்த கிரஹாம் பெல் முதன்முறையாக அதனை சோதனை செய்ய முயன்றபோது, நரேந்திர மோடியிடம் இருந்து அவருக்கு 10 மிஸ்ட் கால்கள் வந்திருந்தன என்பதுதான் அப்டேட்டடாக இருப்பதன் அறிகுறி. அதனடிப்படையில், கிரிக்கெட்டை கண்டுபிடிச்சது வேணும்னா இங்கிலாந்துகாரனாக‌ இருக்கலாம், ஆனால் கிரிக்கெட்டுக்குன்னு ஒரு உலக கோப்பை போட்டி நடக்கும்போது, நாங்கதான் கெத்துன்னு ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, அட ஏன் பாகிஸ்தான் கூட கோப்பையை வென்றிருக்கின்றன – இங்கிலாத்தை தவிர.

england

இதுவரை நடந்து முடிந்துள்ள அத்தனை உலக கோப்பையிலும், நோட்டாவுடனே போட்டி போட்டு வந்துள்ள இங்கிலாந்து அணி இந்த முறை அந்த அவப்பெயரை துடைத்தெறிந்து வெற்றி பெறும் என நம்புவதற்கான இரு முக்கிய காரணங்களில் முதலாவது அவ்வணி வீரர்களின் ஃபார்ம் மற்றும் போட்டி நடைபெறும் இடம் – இங்கிலாந்து.

இங்கிலாந்து

பாகிஸ்தானுடனான நேற்றைய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 359 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி. 300 ரன்களுக்கு மேலாக துரத்திபிடிக்க வேண்டிய டார்கெட்டுக்கென ஒரு மரியாதை உண்டல்லவா, அது ஒரு பயத்தை தருமல்லவா? அதெல்லாம் நீ எதிர்பார்க்க கூடாது, ஏன் எதிர்பாக்குறே என கில்லி பிரகாஷ் ராஜ் கணக்காக இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ, 93 பந்துகளில் 128 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டது மட்டுமல்லாமல், பூ பூக்க வைத்து காய் காய்க்க வைத்து, வெற்றிக்கனியை பறித்து தந்திருக்கிறார். இதுல ஹைலைட்டே, 359 ரன்களை 45 ஓவரில் வாரி சுருட்டியதுதான்.

இங்கிலாந்து

சரியாக இன்னும் இரு வாரங்களில் துவங்க இருக்கும் உலக கோப்பை போட்டியில் மற்ற‌ அணிகளை வீழ்த்தி, கோப்பைக்கு வெற்றி முத்தம் தரபோவதில் இங்கிலாந்து அணி முன்னணியில் இருக்கிறது என்றால் அது நகையல்ல.