உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணியே வெல்லும்; சேன் வார்ன் நம்பிக்கை !!

 

 உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணியே வெல்லும்; சேன் வார்ன் நம்பிக்கை !!

உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணியே வெல்லும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேன் வார்ன் நம்பிக்கை தெரிவித்தள்ளார். 

 

worldcup

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை இங்கிலாந்தில் துவங்க உள்ளது. 
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் மோத உள்ளன. 
இந்த நிலையில், இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சேன், உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணியே வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

australia team

இது குறித்து பேசிய அவர்,  கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்தால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி எவ்வளவு சிறப்பாக விளையாடி இருக்கிறது என்பது தெரியும். கடைசி 6 உலக கோப்பை போட்டிகளில் 4-ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியே இந்த உலகக்கோப்பையையும் வெல்லும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.