உலக குத்துச்சண்டை போட்டி – பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீராங்கனைகள்..!

 

உலக குத்துச்சண்டை போட்டி – பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீராங்கனைகள்..!

54 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மற்றுமொரு இந்திய வீராங்கனையான ஜமுனா போரா, ஆசிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை தைபேவை எதிர் கொண்டார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜமுனா போரா மற்றும் லவ்லினா இருவரும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

ரஷ்யாவில் 11வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அரையிறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார். இதனால், இவருக்கு வெண்கலப்பதக்கம் வென்றார். 

mary

இந்நிலையில் 54 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மற்றுமொரு இந்திய வீராங்கனையான ஜமுனா போரா, ஆசிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை தைபேவை எதிர் கொண்டார். ஜமுனா ஆரம்பத்தில் சறுக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடுவில் தாக்குதல் நடத்த முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதனால், அரையிறுதியில் 1-4 என தோல்வி அடைந்து வெளியேறினார். அரையிறுதி வரை சென்றதால் இவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்திருக்கிறது. 

boxing

இதேபோல் 69 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை லவ்லினா, மற்றுமொரு சீனா வீராங்கனையை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் லவ்லினா தாக்குதல் நடத்தினாலும், அதனை லாவகமாக தற்காப்பு செய்து பதில் தாக்குதல் நடத்தி சீனா வீராங்கனை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதில் தோல்வி அடைந்ததன் மூலம் லவ்லினாவிற்கு வெண்கலப்பதக்கம் கிடைத்திருக்கிறது. 

 

48 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி 4-1 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.