உலக கழுகுகள் தினம் …மனிதர்களுக்கு கழுகு கற்றுத் தரும் பாடம்!

 

உலக கழுகுகள் தினம் …மனிதர்களுக்கு கழுகு கற்றுத் தரும் பாடம்!

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதலாவது சனிக்கிழமையை ‘கழுகுகள் தின’மாக உலக நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. சுற்றுச்சூழலின் ‘துப்புரவு பணியாள்’ என அழைக்கப்படும் கழுகுகள், இயற்கை மாற்றத்தால் அழிவின் விளிம்பில் உள்ளன.  தமிழகத்திலும் அழிந்து வரும் பறவை இனங்களின் பட்டியலில் கழுகுகள் உள்ளன. இறந்து அழுகும் பறவைகள், விலங்குகளின் உடலை உண்டு, அவற்றில் இருந்து நோய்கள் பரவாமல் தடுக்கும் சிறந்த துப்புரவு பணியை கழுகுகள் மேற்கொள்கின்றன. 

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதலாவது சனிக்கிழமையை ‘கழுகுகள் தின’மாக உலக நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. சுற்றுச்சூழலின் ‘துப்புரவு பணியாள்’ என அழைக்கப்படும் கழுகுகள், இயற்கை மாற்றத்தால் அழிவின் விளிம்பில் உள்ளன.  தமிழகத்திலும் அழிந்து வரும் பறவை இனங்களின் பட்டியலில் கழுகுகள் உள்ளன. இறந்து அழுகும் பறவைகள், விலங்குகளின் உடலை உண்டு, அவற்றில் இருந்து நோய்கள் பரவாமல் தடுக்கும் சிறந்த துப்புரவு பணியை கழுகுகள் மேற்கொள்கின்றன. 

eagle

உலகில் இதுவரையில் 23 வகையான கழுகுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 14 வகையான கழுகுக இனங்கள் அழிந்து வரும் பட்டியலில் உள்ளன. இந்தியாவில் 7 வகையான கழுகுகள் மட்டுமே காணப்படுகின்றன. வெண்முதுகு கழுகு, கருங்கழுத்து கழுகு, மஞ் சள்முக கழுகு, செந்தலை கழுகு ஆகிய 4 வகை கழுகுகள் தமிழகத்தில் காணப்படுகின்றன. இவை நீலகிரி வனப்பகுதி, சத்தியமங்க லம், மாயாறு பள்ளத்தாக்கு, பண்டிப்பூர், கேரளாவில் வயநாடு பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு, கீரிப்பாறை, ஆரல்வாய்மொழி மலைப்பகுதிகள் மற்றும் தாம்பரம், கொடைக்கானல், கோவை, தஞ்சை, திருநெல்வேலி பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கழுகுகள் பரவலாக இருந்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 600 கழுகுகள் இருந்தன. தற்போது, அவை பாதியாக குறைந்துவிட்டன. 

eagle

கழுகுகளை, வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்தியும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே இருந்து விட்டால் வலிமையாகவும், தந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை, குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து, இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப்பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக் குஞ்சு கூட்டின் விளிம்பு வரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது. அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்கவிட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.

என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக் குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.

eagle

குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது. இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும் காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக ஆனந்தமாக தைரியமாக வானத்தில் சிறகசைத்து பறக்கத் துவங்குகிறது.