உலக அழகி போட்டி 2018: பட்டதை தட்டிச் சென்றார் மெக்சிகோவின் வனிசா போன்ஸ் டி லியோன்

 

உலக அழகி போட்டி 2018: பட்டதை தட்டிச் சென்றார் மெக்சிகோவின் வனிசா போன்ஸ் டி லியோன்

நடப்பாண்டுக்கான உலக அழகி பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் தட்டிச் சென்றார்

சான்யா (சீனா): நடப்பாண்டுக்கான உலக அழகி பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் தட்டிச் சென்றார்.

சீனாவின் சான்யா நகரில் 68-வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. மொத்தம் 118 பேர் இதில் கலந்து கொண்ட உலக அழகி போட்டியில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த 26 வயதான வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர், வனிசாவுக்கு பட்டத்தை சூட்டினார்.

இரண்டாவது இடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த 20 வயதான நிகோலெனே பிசபா லிம்ஸ்நுகன் பெற்றுள்ளார். அடுத்து மூன்று இடங்களை பெலாரஸ், ஜமைக்கா மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த அழகிகள் பிடித்தனர்.

missworld

2018-ஆம் ஆண்டுக்கான போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அனுகீர்த்தி, இந்தியா சார்பில் கலந்துகொண்டார். திருச்சியில் பிறந்த அனுகீர்த்தி  டாப் 30 வரிசையில் இடம்பெற்றபோதும், துரதிர்ஷ்டவசமாக அவரால் உலக அழகி பட்டதை வெல்ல முடியாமல் போனது.