உலக அளவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம்: பலியானோர் எண்ணிக்கை 3110-ஆக உயர்வு

 

உலக அளவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம்: பலியானோர் எண்ணிக்கை 3110-ஆக உயர்வு

கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகில் பலியானோர் எண்ணிக்கை 3110-ஆக உயர்ந்துள்ளது.

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகில் பலியானோர் எண்ணிக்கை 3110-ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. சீனா தவிர தென்கொரியா, இத்தாலி, ஜப்பான், ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை 60 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ttn

உலக அளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 3110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் 27 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.