உலகிலேயே முதல்முறையாக தானியங்கி புல்லட் ரயில்வே சேவை அறிமுகம் ! சீன ரயில்வேத்துறை சாதனை !

 

உலகிலேயே முதல்முறையாக தானியங்கி புல்லட் ரயில்வே சேவை அறிமுகம் ! சீன ரயில்வேத்துறை சாதனை !

ஆளில்லாமல் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் புல்லட் ரயில் சேவை தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆளில்லாமல் கார் தனியாக இயங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆளில்லா காரை இயக்குவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் அது இந்தியாவுக்க இன்னும் வரவில்லை. இரண்டாவது வாகனங்கள் ஆளில்லாமல் இயக்கப்பட்டால் ஓட்டுநர்களின் வேலை பறிபோகவும் வாய்ப்புள்ளது.

ஆளில்லாமல் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் புல்லட் ரயில் சேவை தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆளில்லாமல் கார் தனியாக இயங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆளில்லா காரை இயக்குவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் அது இந்தியாவுக்க இன்னும் வரவில்லை. இரண்டாவது வாகனங்கள் ஆளில்லாமல் இயக்கப்பட்டால் ஓட்டுநர்களின் வேலை பறிபோகவும் வாய்ப்புள்ளது. இதுஒரு புறம் இருக்க சீனாவில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலை ஆளில்லாமல் இயங்கும் தொழில்நட்பத்தை சீன ரயில்வேத்துறை அறிமுகம் செய்துள்ளது. 

bullet

அதிவேகமாக ரயில்கள் செல்வதற்கு தேவையான தண்டவாள கட்டமைப்பை ஏற்கனவே சீனா வைத்துள்ளது. ஏற்கனவே ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில்கள் சீனாவில் இயங்கி வருகிறது. தற்போது அதிவேக புல்லட் ரயிலையும் ஆளில்லாமல் இயக்க திட்டம் இடப்பட்டுள்ளது. பொதுவாக சீனாவில் மணிக்கு 350 கிலோ மீட்டர் தூரத்தில் புல்லட் ரயில்கள் இயக்கப்படுகிறது. சீன தலைநகர் பெய்ஜீங் முதல் மற்ற நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்வே கட்டமைப்பு உள்ளது. அதாவது இந்த திட்டம் இந்தியாவுக்கு வந்தால் சென்னையில் இருந்து பெங்களுருக்கு ஒரு மணிநேரத்தில் சென்றுவிடலாம். இன்னும் சொல்லப்போனால் வேலைக்கு செல்பவர்கள் கூட தினமும் ரயிலில் சென்றுவிட்டு வரலாம்.bullet train
தற்போது ஓட்டுநர் இல்லாமல் புல்லட் ரயில் சேவையை தொடங்கி உள்ளது சீன அரசு. இந்த ரயில் தானாக இயங்கினாலும் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் அசால்ட்டாக செல்லுமாம். இந்த ரயில் செல்லுவம் வழியில்தான் 2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. எனவே ஒலிம்பிக் விளையாட்டை பார்க்க வரும் ரசிகர்களுக்கு வசதியாக இந்த புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 2,500 சென்சார்கள் மற்றும் கேமராக்கள் உள்ளன. ஏதேனும் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டால் தானியங்கி முறையில் ரயிலை நிறுத்துவதற்கான பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. இந்த ரயிலில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட இணையதள வைபை வசதி, தொடுதிரை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

bullet train

2022ம் ஆண்டு பிப்ரவரி 4ந் தேதி முதல் 22ந் தேதி வரை சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.